'தி எட்ஜ்' குழுமத்திற்கு அமைச்சர் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

'தி எட்ஜ்' குழுமத்திற்கு அமைச்சர் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

1 mins read
ccb1b8c4-5761-4bbe-835c-cc3a698d2e44
-

கோலாலம்பூர்: 1எம்டிபி விவகாரம் தொடர்பில் செய்தி வெளியிட்டதற்காக தி எட்ஜ் நாளேடு மற்றும் வார சஞ்சிகை வெளியிடுவதை தற்காலிகமாக நிறுத்துமாறு மலேசிய உள்துறை அமைச்சு சென்ற ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. அத்தகைய உத்தரவினால் 'தி எட்ஜ்' குழுமத்திற்கு ஏற்பட்ட இழப்புத் தொகையை உள்துறை அமைச்சர் சாஹிட் ஹமிடியும் அமைச்சின் தலைமைச் செயலாளரும் செலுத்த வேண்டும் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த இழப்பீட்டுத் தொகை குறித்து உள்துறை அமைச்சு தாக்கல் செய்திருந்த மனுவை மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு நேற்று தள்ளுபடி செய்தது.