தாய்லாந்தில் ஸிக்கா பாதிப்பு

தாய்லாந்தில் ஸிக்கா பாதிப்பு

1 mins read
0d9d1e2a-9779-4fed-adac-defa37810bc4
-

பேங்காக்: தாய்லாந்தில் கடந்த மூன்று மாதங்களாக ஸிக்கா கிருமி தொற்றுவது அதிகரித்துள்ளதாக நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக் கான ஐரோப்பிய நிலையப் புள்ளிவிவரத் தகவல் தெரிவித்துள்ளது. ஸிக்கா நோய்க்கு காரணமான கொசுக்களின் இனப்பெருக்கத்தைத் தடுக்கத் தாய்லாந்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அந்த நிலையத்தின் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஸிக்கா கிருமி தொற்றிய நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் மாநிலங்களில் அக்கிருமி மேலும் பரவுவதைத் தடுக்க உடனடியாக அவசர நடவடிக்கை நிலையங்களை அமைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் அந்நோய் எந்த அளவு பாதித்துள்ளது என்பது பற்றிய விவரத்தை தெரியப்படுத்துமாறு ஐரோப்பிய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. ஸிக்கா நோய் பற்றிய அனைத்துலக சுகாதார நிபுணர்கள் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைகளைப் பின்பற்றி உரிய நடவடிக்கைகளை எடுக்க விருப்பதாக தாய்லாந்து தெரிவித்துள்ளது. இதற்கிடையே ஆஸ்திரேலியா, தைவான், தென்கொரியா ஆகிய நாடுகள் கர்ப்பிணிப் பெண்கள் சிங்கப்பூர் பயணத்தைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. சிங்கப்பூரில் சுமார் 50 பேருக்கு ஸிக்கா கிருமி தொற்றியுள்ள வேளையில் அந்த நாடுகள் இந்த ஆலோசனையைக் கூறியுள்ளன. ஸிக்கா நோய் கர்ப்பிணிப் பெண்களை அதிகமாகப் பாதிக்கிறது.