பெய்ஜிங்: கிர்கிஸ்தானில் உள்ள சீனத் தூதரகம் தாக்கப்பட்டதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. அது "தீவிரவாத மற்றும் வன்முறைத் தாக்குதல்," என்று சீன வெளியுறவு அமைச்சு தெரி வித்துள்ளது.
அந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு தாக்கு தலுக்குக் காரணமானவர் களைக் கண்டுபிடிக்குமாறு கிர்கிஸ்தான் அதிகாரிகளை சீனா கேட்டுக் கொண்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுன்யிங் பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் கூறினார்.
அத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை என்றும் அவர் சொன்னார். கிர்கிஸ்தானின் தலைநகரான பிஷ்கெக்கிலுள்ள சீனத் தூதரக வளாகத்தின் கதவு மீது தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒரு பயங்கரவாதி, வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை மோதி வெடிக்கச் செய்ததில் தூதரக அதிகாரிகள் மூவர் காயமடைந்தனர்.

