ரோம்: லிபியா அருகே மத்தியதரைக் கடல் பகுதியி லிருந்து திங்கட்கிழமை 6,500 குடியேறிகள் பத்திரமாக மீட்கப் பட்டதாக இத்தாலிய கடலோரக் காவல் படையினர் கூறினர். பல நாடுகளைச் சேர்ந்த மீட்புக் குழுவினரின் ஒருங்கிணைந்த மீட்பு நடவடிக்கைகளால் இது சாத்தியமானது என்று இத்தாலிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இத்தாலிக்குச் செல்வதற்காக குடியேறிகள் பலர் பாதுகாப்பாற்ற படகுகளில் கடல் பயணத்தை மேற்கொண்டதாகவும் அவர் களின் படகுகள் லிபியாவுக்கு அருகே கொந்தளிப்பு மிக்க கடல் அலையில் சிக்கி மூழ்கியதைத் தொடர்ந்து பலர் கடலில் தத்தளிக்க நேர்ந்ததாகவும் கூறப் பட்டது. குடியேறிகளில் சிலர் நீந்திச் சென்று மீட்புக் கப்பலை சென்று சேர்ந்தனர்.
காப்பாற்றப்பட்ட குடியேறிகளில் பெரும்பாலானோர் எரித்திரியா மற்றும் சோமாலியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டது. சண்டை நடக்கும் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இடங் களிலிருந்து வெளியேறும் அகதிகளுடன் சேர்ந்து ஆயிரக் கணக்கான ஆப்பிரிக்க நாட்ட வர்களும் கடல் பயணத்தை மேற் கொள்கின்றனர். ஐரோப்பாவுக்குச் செல்ல முயன்ற சுமார் 1,100 குடியேறிகள் ஞாயிற்றுக்கிழமை மத்தியதரைக் கடல் பகுதி யிலிருந்து மீட்கப்பட்டனர். திங்கள் கிழமை நடந்த மீட்பு நடவடிக்கை களில் இத்தாலிய மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீட்புக் குழுவினரும் ஸ்பானிய அரசாங் கம் சாரா அமைப்புகளின் மீட்புக் குழுவினரும் ஈடுபட்டிருந்தனர்.
சோமாலிய நாட்டைச் சேர்ந்த ஒருவரை மீட்புக் குழுவைச் சேர்ந்த ஒருவர் காப்பாற்றுகிறார். படம்: ராய்ட்டர்ஸ்

