மியன்மார் அமைதி முயற்சியில் பல இனக் குழுக்கள் பங்கேற்பு

மியன்மார் அமைதி முயற்சியில் பல இனக் குழுக்கள் பங்கேற்பு

2 mins read
f0c2c1c5-f0a1-4b78-bd47-f3c3524dd6e7
-

யங்கூன்: மியன்மாரில் பல ஆண்டுகளாக நீடிக்கும் இனக் கலவரங்களுக்கு முடிவு கட்டும் விதமாக அரசு ஏற்பாடு செய்த அமைதிப் பேச்சில் ஆயுதம் ஏந்திப் போராடிய பலதரப்பட்ட இனக் குழுக்கள் பங்கேற்றன. தலைநகரில் 17 இனக் குழுக் களை உள்ளடக்கிய அமைதிப் பேச்சுக் கூட்டத்தை ஆங் சான் சூச்சியும் ஐநா பொதுச் செயலாளர் பான் கீ மூனும் தொடங்கி வைத் தனர். இந்தக்கூட்டத்தின் மூலம் இனக் குழுக்களிடமிருந்து ஆயு தங்களைக் களையச் செய்ய முடியும் என்று அரசு நம்புகிறது.

இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்ட திரு பான் கீ=மூன் சிறுபான்மை ரோஹிங் கியா பற்றிய தனது கவலைகளை வெளிப்படுத்தினார். 1948ல் சுதந்திரம் அடைந்த திலிருந்து பர்மா என்று அழைக் கப்பட்ட மியன்மாரில் தன்னாட்சி அல்லது சுதந்திரம் கேட்டு சிறு பான்மை இனக் குழுக்கள் கலவரத்தில் ஈடுபட்டுவருகின்றன. இந்த நிலையில் முந்தைய ராணுவ ஆதரவு அரசாங்கம், சில குழுக்களின் போராட்டத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தது. ஆனால் தேசிய அளவில் சமரச உடன்பாடு எதுவும் எட்டப் படவில்லை.

இதனால் பல ஆண்டுகளாக ஆங்காங்கே குறிப்பாக சீனாவு டனான எல்லைப் பகுதியில் அடிக் கடி வன்முறை சம்பவங்கள் நடை பெற்று வருகின்றன. இதில் பலர் கொல்லப்பட்டதுடன் பல ஆயிரம் பேர் இடம்பெயர்ந்தனர். இதற்கிடையே அமைதி முயற்சி பற்றிப் பேசிய ஆங் சான் சூச்சி, இனக் குழுக்களுடன் அமைதி உடன்பாட்டை எட்டு வதற்குத் தேசிய ஜனநாயக முன் னணி முன்னுரிமை வழங்கும்," என்றார். ஆங் சான் சூச்சியின் கட்சி கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்த லில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

அமைதிப் பேச்சு வார்த்தையில் பங்கேற்ற பல்வேறு இனக் குழுக்களின் தலைவர்களும் பிரதிநிதிகளும். படம்: ஏஎஃப்பி