தோக்கியோ: ஜப்பானின் பல பகுதிகளை சக்திவாய்ந்த சூறா வளி புரட்டிப்போட்டுள்ள நிலை யில் அதனால் ஏற்பட்ட வெள்ளத் தில் ஒன்பது முதியோர்கள் பரிதாப மாக மாண்டனர். சூறாவளி அந்த வட்டாரத்தை சுழற்றித் தாக்கிய பிறகு சகதி யிலும் இடிபாடுகளிலும் புதைந் திருந்த முதியோர் இல்லத்தில் ஒன்பது பேரும் இறந்து கிடந்தனர் என்று அதிகாரிகள் கூறினர். இந்த சம்பவத்தை விளக்கிய மாவட்ட பேரிடர் அதிகாரி ஒருவர், சூறாவளி தாக்கியதில் முதியோர் இல்லம் சேற்றில் புதைந்துவிட்டது என்றார்.
"இறந்தவர்களின் அடையாளங் களை உறுதி செய்யும் முயற்சி களில் ஈடுபட்டுள்ளோம்," என்று போலிஸ் பேச்சாளரான ஷுகோ சகமோட்டோ சொன்னார். அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட படத்தில் இவாய் சுமி என்ற இடத்தில் உள்ள முதி யோர் இல்லத்தின் மீது ஹெலி காப்டர்கள் அவசரமாக இயங்கிக் கொண்டிருப்பதைக் காண முடிந்தது. அங்கு தவித்துக் கொண்டிருந்த மற்றவர்களையும் மீட்டு கரை சேர்க்கும் முயற்சியில் ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டன. அருகில் உள்ள ஒரு வீட்டில் மற்றொரு வயதான மாது இறந்து கிடந்தார் என்றும் செய்தி யாளர் களிடம் பேசிய அரசாங்க உயர் அதிகாரி யோஹிஹைட் சுகா சொன்னார். இவருடன் சேர்த்து இறந்தவர் களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது. செவ்வாய்க் கிழமை மாலை தெற்கு ஜப்பானை 'லயன்ராக்' சூறாவளி தாக் கியது. இதனால் பெய்த கன மழையில் வெள்ளம் ஏற்பட்டு பல இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
ஹோக்காய்டோவில் உள்ள ஷிமிசு நகரில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வீடு. ஜப்பானில் சக்திவாய்ந்த சூறாவளி வீசியதில் கனமழை பெய்து பல இடங்களில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. படம்: ஏஎஃப்பி

