கோலாலம்பூர்: மலேசியாவில் 59வது தேசிய தினக் கொண்டாட்டம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. டத்தாரான் மெர்டேக்காவில் கூடிய ஆயிரக்கணக்கான மலேசியர்களிடையே பிரதமர் நஜிப்பும் தன்னை இணைத்துக் கொண்டார். காலை 8.10 மணியளவில் வண்ணமயமான தேசிய தின அணிவகுப்பு தொடங்கியது. சுதந்திர தின உரையாற்றிய திரு நஜிப், மலேசியாவின் பல இன சமுதாயத்தில் நிலவும் ஒற்றுமை உணர்வை சுட்டிக்காட்டினார். இந்த ஒற்றுமை உணர்வுதான் மலேசியாவின் சிறப்பு என்றார் அவர்.
மலேசியாவின் மெர்டெக்கா சதுக்கத்தில் நடைபெற்ற 59வது தேசிய தினக் கொண்டாட்டத்தில் துணைப் பிரதமர் அஹமட் சாஹித் ஹமிடி, பிரதமர் நஜிப், மன்னர் அப்துல் ஹலிம் முவாட்ஸாம் ஷா, அரசியார் ஹமினா ஹமிடுன் மற்றும் பலர். படம்: ஏஎஃப்பி

