சிரியா ராணுவம் அதிரடித் தாக்குதல்: பலர் பலி

சிரியா ராணுவம் அதிரடித் தாக்குதல்: பலர் பலி

1 mins read
8eb89982-851e-4687-8b28-bc6b50e0e818
-

டமாஸ்கஸ்: சிரியாவில் கிளர்ச்சிப் படை வசம் உள்ள பகுதிகளில் புதன்கிழமை இரவு அந்நாட்டு ராணுவத்தினர் நடத்திய அதிரடி விமான தாக்குதலில் 17 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் கூறின. சிரியாவில் கடந்த பல ஆண்டுகளாக உள்நாட்டு சண்டை நடந்து வருகிறது. அலெப்போ நகரின் பெரும்பாலான பகுதிகள் கிளர்ச்சியாளர்களின் கட்டுப் பாட்டில் உள்ளன. கிளர்ச்சி யாளர்களுக்கும் சிரியா அதிபர் ஆசாத்தின் அரசுப் படை களுக்குமிடையே கடும் சண்டை நடந்துவருகிறது.

குறிப்பாக கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள மாநிலப் பகுதிகளைக் குறிவைத்து சிரியா ராணுவத்தினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். புதன்கிழமை நடந்த சண்டையில் தங்கள் தரப்பில் இரண்டு தளபதிகள் உட்பட ஐந்து பேர் கொல்லப் பட்டதாக கிளர்ச்சி குழுவினர் அறிக்கை ஒன்றில் தெரிவித் துள்ளனர். அதிபர் ஆசாத்திற்கு ஆதரவாக ரஷ்யப் படையினர் சிரியாவில் சண்டையிட்டு வரும் நிலையில் ஐஎஸ் போராளிகளை ஒடுக்க கூட்டணி நாடுகள் விமானத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

சிரியாவில் அரசாங்கப் படையினர் தாக்குதல் நடத்திய இடத்தில் குடிமைத் தற்காப்புப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். படம்: ஏஎஃப்பி