தாய்லாந்தில் அமைதிப் பேச்சு; எல்லையில் கார்குண்டு கண்டுபிடிப்பு

தாய்லாந்தில் அமைதிப் பேச்சு; எல்லையில் கார்குண்டு கண்டுபிடிப்பு

1 mins read
1d7450a2-600b-44b9-b5ba-ba214a19215d
-

பேங்காக்: தாய்லாந்து அரசாங்கத்திற்கும் தென்பகுதி பிரிவினைவாதிகளுக்கும் இடையே நேற்று அமைதிப் பேச்சு தொடங்கிய வேளையில் மலேசிய எல்லைக்கு அருகே கார்குண்டு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதனை நிபுணர்கள் செயல் இழக்கச் செய்ததாக அதிகாரிகள் கூறினர். களவுபோன ஒரு வாகனத்தில் பெட்ரோல் கொள்கலன்களும் எரிவாயு போத்தல் ஒன்றும் இருந்ததாக அதிகாரி ஒருவர் கூறினார். நரதிவாட் மாநிலத்தில் உள்ள ஒரு வட்டாரத்தில் அந்த வாகனத்தை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். தாய்லாந்தின் தென்பகுதியில் பிரிவினைவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். 2004ஆம் ஆண்டு முதல் இத்தகைய வன்முறைகள் நீடிப்பதாகவும் இதில் சுமார் 6,500 பேர் உயிரிழந்ததாகவும் கண்காணிப்புக் குழு ஒன்று தெரிவித்துள்ளது.