வாஷிங்டன்: அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தை கடும் சூறாவளிக் காற்று தாக்கியுள்ளது கடந்த பதினொரு ஆண்டு களில் முதல் முறையாக ஃபுளோரிடா மாநிலத்தைத் தாக்கியுள்ள சூறாவளி இது வாகும். ஃபுளோரிடா மாநிலத்தின் வளைகுடா கடலோரப் பகுதியில் மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய 'ஹெர்மைன்' என்ற இந்த புயல் காற்றினால் ஏற்பட்டுள்ள உயிர் சேதம் பற்றிய விவரம் தெரியவில்லை. இருப்பினும் இந்தப் புயல் மிகவும் சத்திவாய்ந்தது என்பதால் இதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என்று ஃபுளோரிடா ஆளுநர் ரிக் ஸ்காட் எச்சரித்திருக்கிறார். புயலால் மோசமாகப் பாதிக் கப்பட்ட பகுதிகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பல்லாயிரக்கணக்கான வீடு களில் மின்னிணைப்பு துண்டிக் கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் 70,000 வீடுகள் இருளில் மூழ்கியதாகக் கூறப் படுகிறது. கடலோரத்தில் வாழும் மக்கள் உள்பகுதிக்கு இடம் பெயர்ந்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளனர். ஃபுளோரிடாவில் உள்ள பள்ளிக்கூடங்களையும் அரசாங்க அலுவலகங்களையும் மூடு வதற்கு உத்தரவிடப்பட்டுள் ளது. ஆயிரக்கணக்கான தேசிய பாதுகாப்புப் படைப் பிரிவினர் நிவாரணப் பணிகளுக்காக அணி திரட்டப்பட்டுள்ளனர். சுமார் 8,000 வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக ஆளுநர் ஸ்காட் கூறினார். பலத்த புயல் காற்று வீசும் வேளையில் கனமழை பெய்யக் கூடும் என்றும் இதனால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
'ஹெர்மைன்' என்ற பயங்கரப் புயல் ஃபுளோரிடாவை நெருங்குவதை துணைக்கோள புகைப்படம் காட்டுகிறது. மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசுவதால் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று மக்கள் அஞ்சுகின்றனர். படம்: ஏஎஃப்பி

