பாகிஸ்தானில் இரட்டை தாக்குதல்: பலர் பலி

பாகிஸ்தானில் இரட்டை தாக்குதல்: பலர் பலி

1 mins read
c277b83e-ab93-4df8-8f3b-0ec7b02ff4f6
-

பெஷாவர்: பாகிஸ்தானின் வட மேற்குப் பகுதியில் தீவிரவாதி கள் நடத்திய இரட்டை குண்டு வெடிப்புத் தாக்குதல்களில் குறைந் தது 14 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 52 பேர் காயம் அடைந்த தாகவும் மீட்புப் பணியில் ஈடு பட்டுள்ள அதிகாரி ஒருவர் கூறினார். மர்டான் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே நேற்று அடுத்தடுத்து இரு குண்டு கள் வெடித்ததில் வழக்கறிஞர்கள், காவலர்கள், பொதுமக்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர் என்றும் பலர் காயமடைந்ததாகவும் மீட்புப் பணி அதிகாரி ஹரிஸ் ஹபிப் கூறினார்.

காயமடைந்தவர்கள் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ள தாகவும் அத்தாக்குதல்களுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றும் அவர் சொன்னார். முன்னதாக பாகிஸ்தானிய தலிபான் பிரிவைச் சேர்ந்த போராளிகள் பெஷாவர் நகருக்கு அருகே கிறிஸ்துவர்கள் வசிக்கும் பகுதியில் தாக்குதல் நடத்தினர். தற்கொலைப் படையைச் சேர்ந்த நான்கு போராளிகள் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் கிறிஸ்துவ காலனிப் பகுதியில் தாக்குதல் நடத்தியதில் பாது காவலர் ஒருவரும் குடியிருப் பாளர் ஒருவரும் கொல்லப்பட்டதாக போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

பாகிஸ்தானின் மர்டான் நகரில் உள்ள நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து அந்த இடத்தை போலிஸ் அதிகாரிகள் சோதனை செய்கின்றனர். படம்: ஏஎஃப்பி