பெய்ஜிங்: இரண்டு வாரங்களுக்கு முன்பு சீனாவில் திறக்கப்பட்ட உலகிலேயே மிக நீளமான கண்ணாடிப் பாலம் தாற்காலிக மாக மூடப்பட்டுள்ளது. அப்பகுதியில் அவசரமாக பழுது பார்ப்புப் பணிகளை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதால் அப்பாலம் தற்காலிகமாக மூடப் படுவதாக அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.
இந்த கண்ணாடிப் பாலத்தைக் கடந்து செல்ல அதிகமானோர் விரும்புவதாக அதிகாரிகள் தெரி வித்திருக்கின்றர். மற்றபடி அந்தப் பாலத்தில் வெடிப்போ அல்லது கண்ணாடி உடையவோ இல்லை என்று அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் கூறியதாக அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்தது. மொத்தம் 3.4 மில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்டுள்ள 430 மீட்டர் நீளமான கண்ணாடிப் பாலம் செங்குத்தான ஒரு பள்ளத்தாக்கிற்கு உயரே ஹூனான் மாநிலத்தின் சாங்ஜியா ஜியே நகரில் கட்டப்பட்டுள்ளது.
நாள் ஒன்றுக்கு 8,000 பேர் மட்டுமே இந்தப் பாலத்தை கடந்து செல்ல முடியும். ஆனால் இந்த எண்ணிக்கையைப் போல பத்து மடங்கு மக்கள் இப்பாலத்தை கடந்து செல்ல விரும்புவதாக அரசாங்கப் பேச்சாளர் தெரிவித் துள்ளார். ஆகவே அப்பகுதியை உடனடியாக மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ள தாகவும் அவர் கூறினார். பழுதுபார்ப்புப் பணிக்காக மூடப்பட்டுள்ள இந்த கண்ணாடிப் பாலம் எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது தெளி வாகத் தெரியவில்லை.
சீனாவில் கட்டப்பட்டுள்ள ஆக நீளமான கண்ணாடிப் பாலத்தை ஏராளமானோர் கடந்து செல்கின்றனர். இரண்டு வாரங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட இந்தப் பலம் பழுதுபார்ப்புப் பணிக்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. படம்: ஏஎஃப்பி

