தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பருவநிலை உடன்பாட்டுக்கு அமெரிக்கா-சீனா ஒப்புதல்

2 mins read
90432fd9-61bb-4a83-8959-93bb765ad805
-

பெய்ஜிங்: பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க உலக நாடுகள் சென்ற மாதம் பாரிஸில் கண்ட உடன்பாட்டை அமெரிக்காவும் சீனாவும் ஏற்றுக்கொண்டு அந்த உடன்பாட்டில் சேர்வதை மறு உறுதி செய்துள்ளன. உலக அளவில் வெளியேற்றப் படும் 40 விழுக்காடு கரியமில வாயு புகைக்கு அமெரிக்காவும் சீனாவுமே காரணம் என்று கூறப் படுகிறது.

சீனாவின் ஹாங்சோவ் நகரில் ஜி20 நாடுகளின் மாநாடு நடைபெறும் வேளையில் அமெரிக் காவும் சீனாவும் உலகளாவிய பருவநிலை உடன்பாட்டை ஏற்றுக் கொண்டுள்ளன. ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீனா வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவும் சீன அதிபர் சி ஜின்பிங்கும் இது தொடர்பாக பின்னர் கூட்டறிக்கை வெளியிடுவார்கள் என்று தெரி கிறது.

உலக அளவில் வெளியேற்றப் படும் கரியமில வாயு அளவில் மொத்தம் 55 விழுக்காட்டினை வெளியேற்றும் நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் இணைகின்ற போதுதான் கரியமில வாயு வெளியேற்ற அளவை கட்டுப் படுத்துகிற இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும். மேலும் பல நாடுகள் இந்த உடன்பாட்டினை ஏற்றுக்கொண்டாலும் இந்த உடன்பாட்டை நடைமுறைப்படுத்து வதில் பல சவால்களை உலக நாடுகள் எதிர்நோக்குவதாகக் கூறப்படுகிறது. நேற்று சீனாவுக்கு வந்துசேர்ந்த திரு ஒபாமாவும் சீன அதிபரும் சந்தித்துப்பேசவுள்ளதாக தகவல் கள் கூறின.

தென்சீனக் கடல் விவகாரம், தென் கொரியாவில் அமெரிக்கா ஏற்படுத்தவுள்ள தற்காப்பு ஏவுகணை முறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவர்கள் விவாதிப்பார்கள் என்று தெரிகிறது. அதிகரித்து வரும் உலகளாவிய தன்னைப்பேணித் தனத்திற்கு எதிராக இருதரப்பு முதலீட்டு உடன்பாடு பற்றி இரு தலைவர்களும் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறவிருப்பது குறித்து ஜி20 மாநாட்டில் தலைவர்கள் பேச்சு நடத்துவர் என்று தெரிகிறது. துருக்கிய அதிபர் தாயிப் எர்டோகனையும் திரு ஒபாமா சந்தித்துப் பேசுவார் என்று தெரிகிறது.

ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள சீனா வந்து சேர்ந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. பருவநிலை மாற்றம் தொடர்பாக இந்த மாநாட்டில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் திரு ஒபாமா, தனது பதவிக்காலத்தில் கடைசியாக தற்போது சீனாவுக்கு வந்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்