வத்திகன்: போப் ஆண்டவர் ஃபிரான்சிஸ், செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நேற்று திரண்டிருந்த 100,000க்கு மேற்பட்டோர் மத்தியில் அன்னை திரேசா ஒரு புனிதர் என்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். பொது மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட ஒருவருக்கு கத்தோலிக்க தேவாலயம் வழங்கும் மிக உயரிய கௌரவம் இது. "கோல்கத்தாவைச் சேர்ந்த திரேசாவை புனிதராக நாங்கள் அறிவிக்கிறோம். அவரை புனித ராக பதிவு செய்கிறோம்," என்-று போப் ஆண்டவர் குறிப்பிட்டார்.
அன்னை திரேசா 1997ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி கோல்கத்தாவில் 87வது வயதில் இறந்தார். அதன் பிறகு நோயைக் குணப்படுத்தும் இரண்டு அற் புதங்கள் நிகழ்த்தியதால் அவ ருக்கு புனிதர் பட்டம் வழங்கப் படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. வத்திகன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய அரசு சார் பில் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான குழுவும் கலந்துகொண்டது.
அன்னை திரேசா புனிதர் ஆனதால் இந்தியாவின் கோல்கத் தாவில் அவர் தோற்றுவித்த 'மிஷி னரிஸ் ஆஃப் சாரிட்டிஸ்' சேவை நிலையத்தில் சிறப்புக் கூட்டங்கள் நடைபெற்றன. இதில் ஏராளமான வர்கள் பங்கேற்றனர். மசடோனியாவில் 1910 ஆகஸ்ட் 27ஆம் தேதி அல்பேனிய குடும்பத்தில் பிறந்த திரேசா இந்தியாவில் கோல்கத்தாவில் 1950ல் 'மிஷனரிஸ் ஆப் சாரிட்டிஸ்' அமைப்பை தொடங்கி ஏழை, எளிய, நோயுற்றவர்களை அரவணைத்து உதவி செய்தார்.
இரு அற்புதங்களை நிகழ்த்திய அன்னை திரேசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. ராய்ட்டர்ஸ்

