ஜி20 கூட்டத்தில் பிரதமர் லீக்கு வரவேற்பு

ஜி20 கூட்டத்தில் பிரதமர் லீக்கு வரவேற்பு

1 mins read
ad2fae1e-6d52-4352-8f30-42b0d2a76a1b
-

பிரதமர் லீ சியன் லூங் ஜி20 தலைவர்களின் உச்சநிலைக் கூட்டத்தில் கலந்துகொள்ள நேற்று சீனாவின் குவாங்சூ நகரைச் சென்றடைந்தார். அந்த உச்சநிலை மாநாட் டில் உலகின் மாபெரும் 20 நாடுகளின் தலைவர் கள் கலந்துகொண்டு பல அம்சங்களைப் பற்றி விவாதிக்கிறார்கள். அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பெரும் பொரு ளியல் நாடுகளின் தலை வர்கள் அவர்களில் அடங்குவர். ஜி20 அமைப்பில் சிங் கப்பூர் இடம்பெறவில்லை என்றாலும் சீனாவின் அழைப்பை ஏற்று அது எட்டு விருந்தினர் நாடு களில் ஒன்றாக மாநாட் டில் கலந்துகொள்கிறது. ஜி20 வருடாந்திர இரு நாள் மாநாட்டை இப்போது முதன்முறையாக சீனா நடத்துகிறது. வாய்ப்பேச்சு குழுவாக இல்லாமல் செயற்குழுவாக மாறும்படி உலகத் தலைவர்களுக்கு சீனா நேற்று அழைப்பு விடுத்தது. இந்தச் சந்திப்பு உலகப் பொருளியல் வளர்ச்சிக்கு புதிய பாதையைக் காணும் என்று சீன அதிபர் ஸி ஜின்பிங் நேற்று மாநாடு தொடக்கத்தில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.

ஜி20 மாநாட்டில் விருந்தினராகக் கலந்து கொள்ளும் சிங்கப்பூரின் பிரதமர் லீ சியன் லூங்கை (இடது) வரவேற்கும் சீன அதிபர் ஸி ஜின்பிங். படம்: ஏஎஃப்பி