18 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக்கொண்ட மலேசியத் தலைவர்கள்

18 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக்கொண்ட மலேசியத் தலைவர்கள்

1 mins read
1a2b7286-767c-47cc-8302-14ba445f8991
-

மலே­சி­யா­வின் முன்னாள் பிர­த­மர் மகா­தீர் முக­மது நேற்று கோலா­லம்­பூ­ரின் உயர் நீதி­மன்றத்­திற்கு வருகை அளித்­தார். அங்கு மலே­சி­யா­வின் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரான அன்­வார் இப்­ரா­கிம் தேசிய பாது­காப்புச் சட்டத்திற்கு எதி­ராக தொடுத்த வழக்­கின் விசா­ரணையைக் காண்­ப­தற்கு திரு மகாதீர் வந்­தி­ருந்தார். அப்­போது இரண்டு தலை­வர்­களும் 18 ஆண்­டு­களுக்­குப் பிறகு முதன்­மு­த­லாக நேருக்கு நேர் சந்­தித்து உரை­யா­டி­னர். இயற்கைக்கு மாறான வகை­யில் ஆணு­டன் உறவு வைத் ­தி­ருந்த­தா­கக் குற்றம் சுமத்­தப்­பட்டு தம்­மால் 1998ஆம் ஆண்டில் பதவி நீக்கம் செய்­யப்­பட்ட மலே­சி­யா­வின் முன்னாள் துணைப் பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கிமை சந்­தித்­துப் பேசினார் திரு மகாதீர். சந்­திப்­பின்­போது இரு­வ­ரும் கை கு­லுக்­கிக் கொண்ட­னர்.

"1998ஆம் ஆண்டு செப்­டம்பர் 2ஆம் தேதிக்­குப் பிறகு இவர்­கள் இரு­வ­ரும் சந்­தித்­துக்­கொள்­வது இதுவே முதல் முறை," என பிகே­ஆர் கட்­சி­யின் தலை­வ­ரும் அன்­ வ­ரின் மனை­வி­யு­மான திரு­மதி வான் அஸிஸா வான் இஸ்­மா­யில் டுவிட்­ட­ரில் தெரி­வித்­துள்­ளார். மலே­சிய உயர்­நீ­தி­மன்றத்­தில் நடந்த இந்தச் சந்­திப்­பின்­போது பிகே­ஆர் கட்­சி­யின் துணைத் தலை­வர் அஸ்­மின் அலி, முன் னாள் பத்து காவான் அம்­னோ­வின் துணைத் தலை­வர் கைரு­தின் அபு ஹஸன் ஆகி­யோர் இருந்த­னர். மலே­சி­யா­வின் புதிய தேசிய பாது­காப்­புச் சட்டம் அர­சமைப்­புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் அதனை நீக்கக் கோரி­யும் திரு அன்­வார் வழக்­குத் தொடுத்­துள்­ளார். பிர­த­ம­ருக்கு அதிக அதி­கா­ரத்தைக் கொடுக்­கும் இந்தப் புதிய சட்­டத்தை மலே­சி­யா­வின் எதிர்க்­கட்­சி­யும் மனித உரிமை அமைப்புகளும் குறை கூறி வரு­கின்றன.