லங்காவியின் அடையாளமான கழுகு சிலையை உடைக்க எதிர்ப்பு

லங்காவியின் அடையாளமான கழுகு சிலையை உடைக்க எதிர்ப்பு

1 mins read
d2734998-66db-4aef-b31c-4fa8e75755a7
-

லங்காவி: மலேசியாவின் லங் காவியில் உள்ள புகழ்பெற்ற கழுகு சிலை 'ஹராம்' என்று கூறப்படு வதற்கு அங்குள்ள சுற்றுலாத் துறையினர் கடும் எதிர்ப்புத் தெரி வித்துள்ளனர். அது, இஸ்லாமுக்கு எதிரானது, அதை உடைக்க வேண்டும் என்று கூறப்பட்டதால் சமூக ஊடகங் களில் இந்த விவகாரம் பரவி கழுகு சிலைக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. லங்காவி சுற்றுலா சங்கத்தின் தலைவர் சைனூடின் காதிர், "கெடா மாநிலத்தில் லாங் சதுக்கத் தில் உள்ள 12 மீட்டர் உயர கழுகு சிலை கடந்த இருபது ஆண்டு களாகச் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது," என்று குறிப் பிட்டார்.

"லங்காவியின் அடையாளச் சின்னமாகவும் அது விளங்கி வருகிறது," என்றார் அவர். "அது, வழிபாட்டுத் தளமோ அல்லது இஸ்லாமுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கான இடமோ அல்ல," என்று அவர் கூறினார். மனிதன், விலங்கு போன்ற வாழும் உயிரினங்களை சிலையாக வடிப்பது இஸ்லாமுக்கு எதிரானது என்று வெள்ளிக் கிழமை அன்று பேராக் துணை முஃப்தி ஸம்ரி ஹா‌ஷிம் தெரிவித்திருந்தார். இதனால் அந்தச் சிலையை உடைக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.

லங்காவியில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் புகழ் பெற்ற கழுகு சிலை. படம்: த ஸ்டார்