ஆப்கானில் தொண்டு நிறுவனம் மீது தாக்குதல்; 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஆப்கானில் தொண்டு நிறுவனம் மீது தாக்குதல்; 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

1 mins read

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள தொண்டு நிறுவனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்கு தலில் ஒருவர் உயிரிழந்தார். தாக்குதல் நடத்திய மூன்று தீவிரவாதிகளையும் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதாக உள்துறை அமைச்சு தெரிவித்தது. தொண்டு நிறுவனத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் முதலில் இரண்டு வெடிகுண்டு களை வெடிக்கச்செய்த பின்னர் துப்பாக்கிகளால் சுட்டனர். இதில் ஒருவர் பலியானார்.

இது தொடர்பாக தகவல் அறிந்த தும் பாதுகாப்புப் படையினர் விரைந்து சென்று எதிர்த் தாக்குதலைத் தொடங்கினர். தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே சில மணிநேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டை யில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொண்டு நிறுவனத்தின் உள்ளே இருந்த பத்து வெளிநாட்டினர் உள்பட 42 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்று ஆப்கானிஸ் தான் உள்துறை அமைச்சு செய்தித் தொடர்பாளர் தெரிவித் துள்ளார். இந்நிலையில் காபூலில் பாதுகாப்பு அமைச்சு அருகே நேற்று இரு குண்டுகள் வெடித்ததில் குறைந்தது 24 பேர் உயிரிழந்ததாகவும் 91 பேர் காயம் அடைந்ததாகவும் அதிகாரி கள் கூறினர். உயிரிழந்தவர் களில், பல மூத்த பாதுகாப்பு அதிகாரிகளும் அடங்குவர் என்று கூறப்படுகிறது.