சிரியாவில் அரசாங்கப் படை 'விஷவாயு' தாக்குதல்

சிரியாவில் அரசாங்கப் படை 'விஷவாயு' தாக்குதல்

1 mins read
04947b05-6eaa-4fc5-829c-99853f2975a9
-

அலெப்போ: சிரியாவில் கிளர்ச்சிப் படையினர் வசம் உள்ள அலெப்போ நகரில் அரசாங்கப் படையினர் குளோரின் விஷவாயு தாக்குதலை நடத்தியிருப்பதாகக் கூறப்படு கிறது. அந்நாட்டு ராணுவம் குளோரின் வி ஷ வாயுவை பீப்பாயில் அடைத்து ஹெலிகாப்டர் மூலம் வீசியதாக தகவல் வெளியாகி உள்ளது. இத்தாக்குதலில் 90 பேர் படுகாயம் அடைந்ததாகவும் ஏராள மானோர் மூச்சு திணறலால் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற குளோரின் வாயுவினை போரில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதையும் மீறி சிரியா ராணுவம் இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கிறது.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காட்சிகள் சமூக வலைத் தளங்களில் வெளியாகியுள்ளன. ஆக்ஸிஜன் கவசம் மூலம் பலர் சுவாசித்து வருவதை அப்படங்கள் காட்டுகின்றன. சிரியாவில் நீடிக்கும் உள் நாட்டுச் சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்தில் எதிர்கட்சித் தலைவர்கள் நேற்று லண்டனில் சந்தித்துப் பேசவிருந்த வேளையில் சிரியாவில் அரசாங்கப் படையினர் விஷவாயு தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

அரசாங்கப் படையினர் நடத்தியதாகக் கூறப்படும் குளோரின் வாயு தாக்குதலில் காயமடைந்தவர்களில் இந்தச் சிறுவனும் ஒருவன். படம்: ராய்ட்டர்ஸ்