நடுவர் மன்றத் தீர்ப்பு இரு தரப்பையும் கட்டுப்படுத்தும்

நடுவர் மன்றத் தீர்ப்பு இரு தரப்பையும் கட்டுப்படுத்தும்

2 mins read
994efeb1-fbbe-4586-9f59-ef95cb91dc2d
-

வியந்தியன்: தென் சீனக் கடல் விவகாரம் குறித்து தி ஹேக் நகரில் உள்ள நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை சீனா மதித்து நடக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். லாவோஸில் ஆசியான் தலை வர்கள் மாநாட்டில் உரையாற்றிய திரு ஒபாமா, அனைத்துலக நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பு அந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நாடுகள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வழிவகுக்கும் என்று கூறினார். தென் சீனக் கடல் விவகாரம் குறித்து பிலிப்பீன்ஸ் தொடுத்திருந்த வழக்கு தொடர்பில் கடந்த ஜூலை மாதம் தி ஹேக் நகரில் உள்ள நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியது.

அந்தக் கடல் பகுதியில் சீனா உரிமை கொண்டாடுவதற்கு சட்ட பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை என்று நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியது. அத்தீர்ப்பு சட்ட அடிப்படை யிலானது அல்ல என்றும் அதனை சீனா ஏற்றுக்கொள்ளாது என்றும் சீனா கூறி வருகிறது. இந்நிலையில் லாவோசில் ஆசியான் தலைவர்கள் முன்னிலை யில் உரையாற்றிய திரு ஒபாமா, நடுவர் மன்றத் தீர்ப்பு தென் சீனக் கடல் பகுதியில் வெவ்வேறு நாடுகளுக்கு உள்ள கடல்சார்ந்த உரிமைகளைத் தெளிவுபடுத்த உதவியதாகக் குறிப்பிட்டார்.

லாவோசில் நடந்த 11-வது கிழக்கு ஆசிய மாநாட்டில் கலந்துகொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா (நடுவில்), இந்திய பிரதமர் நரேந்திர மோடி (இடது), புருணை சுல்தான் ஹஸ்னல் போல்கியா, வியட்னாம் பிரதமர் நியூயென் சுவான், லாவோஸ் பிரதமர் தோங்லோன் சிசெளலித் (வலம்) ஆகியோர். படம்: ஏஎஃப்பி