முதியவரின் மறதியால் 2 வயதுச் சிறுவன் கழிவுநீரில் மூழ்கி மரணம்

முதியவரின் மறதியால் 2 வயதுச் சிறுவன் கழிவுநீரில் மூழ்கி மரணம்

1 mins read

பத்து பகாட்: ரம்புத்தான் பழங்களைப் பறிக்க தாத்தாவுடன் சென்ற இரண்டு வயதுச் சிறுவன் அருகில் இருந்த கழிவுநீர்க் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த புதன்கிழமை பிற்பகலில் 67 வயதான தாத்தா, ஆதம் அமின் ஜெஃப்ரி எனும் அச்சிறுவனை வீட்டிலிருந்து 60 மீட்டர் தூரத்தில் இருக்கும் ரம்புத்தான் மரத்தில் பழம் பறிக்க அழைத்துச் சென்றார். பழம் பறித்த பிறகு பேரனை உடன் அழைத்துச் சென்றதை மறந்த தாத்தா, வீட்டுக்குத் திரும்பி உறங்கச் சென்றுவிட்டார். சுமார் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு சிறுவனின் சடலம் கழிவுநீரில் மிதந்ததை அக்கம்பக்கத்தார் கண்டுபிடித்தனர். சிறுவன் இறந்து போனது மருத்துவமனையில் உறுதிசெய்யப்பட்டது. பிறந்தது முதல் தாத்தாவுடன் வசித்து வந்த அச்சிறுவனின் பெற்றோர் ஷா அலாமில் பணிபுரிந்து வந்தனர். சிறுவனின் தம்பி பெற்றோருடன் வசித்து வருகிறான்.