ரயில் நிலையம் மீதான தாக்குதல் முறியடிப்பு

ரயில் நிலையம் மீதான தாக்குதல் முறியடிப்பு

1 mins read

பாரிஸ்: டோட்ரெ டேம் தேவா­ல­யத்­துக்கு அருகில் காரில் 7 எரி­வா­யுத் தோம்­பு­களை ஏற்­றி­ய­தா­கக் கைது செய்­யப்­பட்ட மூன்று பெண்கள் பாரிசில் உள்ள 'கேர் டி லையோன்' ரயில் நிலை­யத்தைத் தாக்கத் திட்­ட­மிட்­டி­ருந்த­தாக பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சு தெரி­வித்­துள்­ளது. கைது செய்­யப்­பட்ட மூன்று பெண்­களில் ஆக இளை­ய­வ­ரான 19 வயதுப் பெண்ணின் தந்தை­யின் கார் அது என்பது கண்ட­றி­யப்­பட்­டுள்­ளது.

அந்த ஆடவர் ஐஎஸ் அமைப்­புக்கு ஆத­ர­வா­கப் போராட விரும்­பி­ய­வர் என்று ஏற்­கெ­னவே சந்­தே­கிக்­ கப்­பட்­ட­வர். மூன்று பெண்­களில் ஒருவர் கைது செய்ய முற்­பட்ட போலி­சாரைத் தாக்­கினார். அதனைத்­தொ­டர்ந்து போலிசார் நடத்­திய துப்­பாக்­கிச்­சூட்­டில் அவர் காய­முற்­றார். பயங்கரவாதக் கொள்கைகள் கொண்ட மூவரில் மற்ற இருவரும் 39, 23 வயதான பெண்கள்.