மலேசியாவில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம்

மலேசியாவில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம்

1 mins read

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் முன்­கூட்­டியே தேர்தல் நடத்­தப்­ப­ட­லாம் என்று கணிக்கப்­படு­கிறது. மலே­சி­யப் பிர­த­மர் நஜிப் ரசாக், ஆளும் கட்­சி­யான அம்­னோ­வைச் சேர்ந்த மூத்த அதி­கா­ரி­கள் ஆகியோர் அண்மைய வாரங்களில் நாடு முழு­வ­தும் பல நிகழ்ச்­சி­களில் பங்­கேற்­றுள்­ள­னர். அந்த சம­யத்­தில் இளம் வாக்­கா­ளர்­களை­யும் அவர்­கள் சந்­தித்து உரை­யா­டி­யுள்­ள­தா­கக் கூற­பப்­டு­கிறது. இவற்றைக் கொண்டு ஆராய்ந்து பார்த்­தால் 2108ஆம் ஆண்டு மத்­தி­யில் நடை­பெ­ற­வேண்­டிய தேர்தல் முன்­ன­தா­கவே நடத்­தப்­ப­ட­லாம் என கவ­னிப் ­பா­ளர்­கள் கருத்­துரைக்­கின்ற­னர். சில அம்னோ அதி­கா­ரி­கள் மார்ச் மாதத்­தில்­கூட தேர்தல் நடத்­தப் ­ப­ட­லாம் என்று கூறி­யுள்­ள­னர்.

'1எம்டிபி' சர்ச்சை தொடர்­பில் 63 வயதான திரு நஜிப் பிர­த­மர் பதவியைத் துறக்க வேண்­டு­மென கடந்த சில மாதங்களில் பல தரப்­பு­களி­லி­ருந்து கோரிக்கை­கள் விடுக்­கப்­பட்­டன. அவரை முன்­ நி­றுத்தி தேர்தலை எதிர்­கொண்டால் வெற்றி பெறு­வ­தில் சிரமம் இருக்­க­லாம். ஆனால், தேர்தலில் வெற்றி பெற்றால் அவருடைய தலைமை பற்றிய சந்தேகங்களைப் போக்கு வதுடன் 2020ஆம் ஆண்டுக்குள் மலேசியாவை வளர்ச்சியடைந்த நாடாக ஆக்கக்கூடிய பொரு ளியல் சீர்திருத்தத்தைச் செயல் படுத்த அவருக்கு வாய்ப்பாக அது அமையும். எதிர்க்­கட்­சி­களிடையே ஒற் றுமை இல்­லா­த­தால் தேர்தல் முடி­வு­கள் அம்­னோ­வுக்­குச் சாத­க­மாக இருக்­க­லாம் எனவும் கவ­னிப்­பா­ளர்­கள் தெரி­விக்­கின்ற­னர்.