வடகொரிய அணுவாயுத சோதனை வெற்றி; ஜப்பான், தென்கொரியா கலக்கம்

வடகொரிய அணுவாயுத சோதனை வெற்றி; ஜப்பான், தென்கொரியா கலக்கம்

1 mins read

சோல்: அதிக சக்­தி­வாய்ந்த அணு ஆயுதம் ஒன்றை வட­கொ­ரியா வெற்­றிக­ர­மா­கச் சோதனை செய்­துள்­ளது. வெவ்வேறு அள­வு­களில் எரி­படை­களைத் தயா­ரித்து ஏவு­கணை­யில் பொருத்தி அணு ஆயு­த­மாக உரு­வாக்­கக்­கூ­டிய அதி ­ந­வீன ஆற்றல் பெற்­றி­ருப்­ப­தாக வட­கொ­ரியா கூறி­யி­ருப்­பது அதன் எதிரி நாடு­களுக்­குக் கவலை அளிப்­ப­தாக இருக்­கிறது. வட­கொ­ரியா அத்­தகைய நவீன ஆயு­தங்கள் செய்­வதற்­கான ஆற் றல் பெற்­றி­ருப்­ப­தற்கு அறி­வி­யல் ­பூர்வ ஆதாரம் இருப்­ப­தா­கக் கூறப்­படு­கிறது.

சிறிய அள­வி­லான எரி­படை யைத் தயா­ரிப்­ப­தில் வட­கொ­ரியா வெற்றி பெற்­றி­ருப்­ப­தாகக் கடந்த ஏப்ரல் மாதத்­தில் தென்­கொ­ரியா தெரி­வித்­தது. சிறிய அள­வி­லான எரிபடை, ஏவு­கணைத் தளங்களை வட­கொ­ரி­யத் தலைவர் கிம் ஜோங் உன் பார்வை­யிட்­ட­போது எடுக்­கப்­பட்ட புகைப்­ப­டங்கள் சென்ற மார்ச் மாதத்­தில் வெளி­யி­டப்­பட்­டன. இந்த வாரத் தொடக்­கத்­தில் ரோடோங் எனப்­படும் 2,000 கி.மீ. தூரம் பாயக்­கூ­டிய ஏவுகணை வடகொரியாவில் சோதனை செய்­யப்­பட்­டது. வட­கொ­ரியா தனது ஐந்தா­வது ஏவு­கணைச் சோதனையை நேர்று மேற்­கொண்டதை அடுத்து அமெ­ரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான், தென்­கொ­ரியா ஆகிய நாடுகள் கண்ட­னம் தெரி­வித்­துள்ளன.

வட­கொ­ரி­யா­வின் இச்­செ­யல் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைக்­கப்­போ­வ­தாக அமெ ரிக்க, ரஷ்ய வெளி­யு­றவு அமைச்­சர்­கள் கூறி­யுள்­ள­னர். சீனாவில் உள்ள வட­கொ­ரி­யத் தூத­ரி­டம் அர­ச­தந்­திர முறையில் எதிர்ப்பு தெரி­விக்­க­வி­ருப்­ப­தாக சீனா தெரி­வித்­தது. 'ஏற்­றுக்­கொள்ள இயலாத செயல்' என ஜப்­பா­னும் 'அனைத்­ து­லக அளவில் வட­கொ­ரியா மேலும் தனிமைப்­படுத்­த வழி வகுக்கும்' என தென்கொரியாவும் குறிப்பிட்டுள்ளன.