ஜகார்த்தா: கடற்கொள்ளையர்கள் இந்தோனீசிய கடற்பகுதியில் ஆரம்பித்து அனைத்துலக கடற்பகுதிக்குள் நுழைந்தால் அவர்களைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்தோனீசிய அதிகாரிகள் பிலிப்பீன்ஸ் எல்லைக்குள் நுழையலாம் என பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்ட்டே கூறியுள்ளார். தென் சீனக் கடல் பகுதியில் கடற்கொள்ளையர்கள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதால் இந்தோனீசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து சுற்றுக்காவல் பணியில் ஈடுபடுவது, நாடுகள் தங்களது எல்லைக்குள்ளே இடர்காப்பு நிலையங்களை அமைத்து அவசரகாலங்களில் செயல்படுவது ஆகியவற்றை மேற்கொள்ள இருக்கின்றன. இதன் தொடர்பில் இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ வுடன் உரையாட இருப்பதாக இந்தோனீசியாவுக்குச் சென்றுள்ள டுட்டர்ட்டே கூறியுள்ளார்.
இந்தோனீசிய அதிகாரிகள் பிலிப்பீன்ஸ் கடற்பகுதியில் நுழைய அனுமதி
1 mins read

