மலேசிய மாணவர்கள் சிங்கப்பூர், பிலிப்பீன்ஸ் செல்ல மலேசியா தற்காலிகத் தடை

மலேசிய மாணவர்கள் சிங்கப்பூர், பிலிப்பீன்ஸ் செல்ல மலேசியா தற்காலிகத் தடை

1 mins read

கோலாலம்பூர்: பள்ளிக்கூட மாணவர்கள் சிங்கப்பூர், பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளுக்கு சுற்றுலாப் பயணம் மேற் கொள்வதற்கு மலேசிய கல்வி அமைச்சு தற்காலிகத் தடை விதித்துள்ளது. அந்த நாடுகளில் பலருக்கு ஸிக்கா கிருமி தொற்றியிருப் பதால் தற்சமயம் அவ்விரு நாடு களுக்கும் செல்வதை மாணவர் கள் தவிர்க்க வேண்டும் என்று அமைச்சு ஆலோசனை கூறி யுள்ளது.

கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் சந்தித்துப் பேசிய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சர் மஹட்சிர் கூறினார். அனைத்து பள்ளிக்கூடங் களுக்கும் கல்வி நிலையங் களுக்கும் தற்காலிகத் தடை பற்றிய சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார். சிங்கப்பூர் சென்று திரும்பிய ஒரு மலேசிய மாதுக்கு முதன் முதலில் ஸிக்கா கிருமி தொற்றியது கண்டுபிடிக்கப் பட்டது. அவருடன் சேர்த்து மலேசியாவில் 3 பேருக்கு அக்கிருமி தொற்றியுள்ளது.