சிரியா அமைதித் திட்டம்; அமெரிக்கா, ரஷ்யா இணக்கம்

சிரியா அமைதித் திட்டம்; அமெரிக்கா, ரஷ்யா இணக்கம்

2 mins read
21ffa5fe-1b6a-4f0f-8dfd-b0ad8d6d53c9
-

ஜெனிவா: சிரியாவில் சண்டை நிறுத்த அமைதித் திட்டத்திற்கு அமெரிக்காவும் ரஷ்யாவும் இணக் கம் கண்டுள்ளன. புதிய அமைதித் திட்டம் தொடர்பில் இரு நாடு களும் ஓர் உடன்பாடு கண்டுள் ளன. சிரியாவில் சண்டை நிறுத்த உடன்பாடு திங்கட்கிழமை முதல் நடப்புக்கு வருகிறது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவும் கூறியுள்ளனர். சிரியாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி கள் வழங்குவதற்கான வசதிகளை மேம்படுத்தவும் சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் இலக்குகள் மீது கூட்டாக விமானத் தாக்குதல்களை நடத்த வும் அந்த உடன்பாடு வகை செய்கிறது.

புதிய அமைதித் திட்டத்தின் கீழ் சிரியா அரசாங்கம், எதிர்த்தரப்பினர் வசம் உள்ள குறிப்பிட்ட பகுதிகளில் போர் நடவடிக்கைளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். ஐஎஸ் மற்றும் அல் நுஸ்ரா போராளி களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்த அமெரிக்காவும் ரஷ்யாவும் கூட்டாக ஒரு நிலையத்தை அமைப்பதற்கும் அத்திட்டம் வகை செய்கிறது. திரு ஜான் கெர்ரியும் திரு லாவ்ரோவும் சந்தித்துப் பேசிய பின்னர் அமைதித் திட்டம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. "ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க மற்றும் ரஷ்யப் படையினர் விமானத் தாக்குதல் களை நடத்துவற்கு நாங்கள் கூட்டாக இணக்கம் கண் டுள்ளோம்," என்று திரு லாவ்ரோவ் கூறினார். புதிய அமைதித் திட்டம் சிரியாவில் வன்செயல்களைக் குறைக்க உதவும் என்று தாங்கள் நம்புவதாக திரு ஜான் கெர்ரி கூறினார்.

சிரியாவுக்கான ஐநா சிறப்புத் தூதர் ஸ்டஃபான் டி மிஸ்டுரா, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகிய மூவரும் சிரியா நெருக்கடி குறித்து கலந்து ஆலோசித்த பின்னர் புதிய அமைதித் திட்டம் குறித்து செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவித்தனர். படம்: ஏஎஃப்பி