வெடித்துச் சிதறிய கொதிகலன்; 24 பேர் பலி

வெடித்துச் சிதறிய கொதிகலன்; 24 பேர் பலி

2 mins read
89ba12f7-ca55-41be-b2c3-9b71f40d8dd2
-

பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவை ஒட்டி அமைந்துள்ள காஸிப்பூர் மாவட்டம், டோங்கி தொழிற்பேட் டையில் இருக்கும் ஒரு தொழிற் சாலையில் நேற்றுக் காலை கொதி கலன் வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சிக்கி 24 பேர் மாண்டனர்; 74 பேர் காயமடைந்தனர். இந்த வெடிப்பால் டேம்பேக்கோ ஃபாயில்ஸ் லிமிட்டெட் எனும் அந்த பிளாஸ்டிக் தொழிற்சாலை யில் மளமளவென தீ பரவியது. இதன் காரணமாக நான்கு தளங் களைக் கொண்ட அந்தக் கட்ட டத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாக உள்ளூர் தொலைக் காட்சிகள் தெரிவித்தன.

காலை 6.15 மணிக்கு நிகழ்ந்த இந்தக் கொதிகலன் வெடிப்பால் மூண்ட கட்டுக்கடங்காத தீயை அணைக்கும் பணியில் 20 தீ அணைப்பு வாகனங்கள் ஈடுபடுத் தப்பட்டன. நான்கு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் தீ முற் றிலுமாக அணைக்கப்பட்டது. இதற்கிடையே, இந்த விபத்து குறித்து விசாரிக்க மாவட்ட நிர் வாகம் ஐவர் அடங்கிய குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழு 15 நாட்களில் தனது விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்யும்.

விபத்து நிகழ்ந்தபோது பெரும் எண்ணிக்கையிலான ஊழியர்கள் அந்தத் தொழிற்சாலையில் இருந் ததாக அங்கு நிர்வாகியாகப் பணியாற்றும் ரியாத் அகமது தெரிவித்தார். இந்த வெடிப்பால் அந்தப் பகுதியே குலுங்கியதாகக் கூறினார் அவர். "முதலில் நிலநடுக்கம் என்று தான் நினைத்தேன். சிறிது நேரத் திற்குப் பின்னரே தொழிற் சாலையில் கொதிகலன் வெடித் தது பற்றித் தெரிய வந்தது," என்று அவர் சொன்னார்.

தீயில் கருகி உயிரிழந்த ஊழியரின் உடலை மீட்க முயலும் தொண்டூழியர். படம்: ஏஎஃப்பி