கோலாலம்பூர்: ஸிக்கா கிருமி தொற்றியிருக்கிறதா என்பதை நிர்ணயிப்பதற்காக 40 பேரிடம் மருத்துவ சோதனை மேற்கொள்ளப்படுகிறது என்று மலேசிய சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ். சுப்பிரமணியம் நேற்றுத் தெரிவித்தார். ஸிக்கா பரவலைத் தடுக்கும் முயற்சியாக அரசாங்க, தனி யார் சோதனைச் சாலைகளில் ரத்த மாதிரிகள் சோதிக்கப்படு கின்றன என்றார் அவர்.
மலேசியாவில் இதுவரை நான்கு பேருக்கு ஸிக்கா கிருமி தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் கர்ப்பிணிப் பெண்ணும் ஒருவர். ஆனால் நாற்பது பேருக்கும் ஸிக்கா கிருமி தொற்றியிருப் பதற்கான அறிகுறிகள் தென் படுகிறதா என்பது குறித்து அமைச்சர் சுப்பிரமணியம் விளக்கம் அளிக்கவில்லை. "தற்போதைய நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். சோதனைகள் முடிந்த தும் புதிய ஸிக்கா கிருமி தொற்றுச் சம்பவங்கள் இருக்கின்றனவா என்பதை மருத்துவ ஆய்வு நிலையம் அறிவிக்கும்," என்று திரு சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.
மலேசிய இந்தியர் காங்கிரசின் 70வது ஆண்டுக் கொண்டாட்டத் தில் பங்கேற்ற அவர் செய்தியாளர் களிடம் பேசினார். சோதனையில் ஸிக்கா கிருமி தொற்றியிருப்பது தெரிய வந்தால் அந்த நபர் தனியாகத் தங்க வைக் கப்பட்டு அவர் ரத்த நன்கொடை வழங்குவதற்குத் தடை விதிக்கப் படும் என்று அமைச்சர் சொன்னார்.
ஸிக்கா சம்பவங்கள் குறித்துப் பேசிய அமைச்சர் சுப்பிரமணியம். படம்: மலேசிய ஊடகம்

