எருமையைப் பிடிக்கும் முயற்சியில் பலர் காயம்

எருமையைப் பிடிக்கும் முயற்சியில் பலர் காயம்

2 mins read
4e90a91f-d2cb-4dd1-99f6-a0dda3fe3233
-

கோத்தா கினபாலு: ஹஜ்ஜுப் பெருநாளில் குர்பான் கொடுப் பதற்காக வைக்கப்பட்டிருந்த எருமை மாடு தப்பி ஓடியதால் அதனைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட பலர் காயம் அடைந் தனர். லிகாஸ் என்ற இடத்தின் அருகில் உள்ள வீட்டின் உரிமை யாளர், மாட்டைக் கயிறு மூலமாக மரத்தில் கட்டியிருந்தார். நேற்றுக் காலை 10.00 மணியளவில் கயிற்றின் இறுக்கம் தளர்ந்து அவிழ்ந்ததால் மாடு அந்த இடத் தைவிட்டு ஓடியது. பலர் மாட்டைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால் எதிரே வந்தவர்களையும் அது முட்டி மோதியது. இதில் உரிமையாளரின் மகனுக்குக் கை, கால்களில் காயம் ஏற்பட்டது.

இதற்கிடையே மாடு ஒரு கால்வாயில் புகுந்து மறைந்து கொண்டது. சிறிது நேரத்தில் அங்கு வந்த தீயணைப்பு வீரர் களும் குடிமைத் தற்காப்பு அதி காரிகளும் மாட்டுக்கு அருகில் சென்றனர். ஆனால் அங்கிருந்து ஓடிய மாடு அருகில் இருந்த ஷான் தாவோ உயர்நிலைப் பள்ளியில் நுழைந்து வழியில் மோட்டார் சைக்கிள் ஓட்டியையும் உதைக்க முயற்சி செய்தது. சம்பவத்தைப் படம் எடுத்த ஆடவரையும் அது முட்டியது. எருமைத் தாறுமாறாக ஓடியதில் தீ அணைப்பாளர் ஒருவரும் காயம் அடைந்தார். இதற்கிடையே அங்கு வந்த வனவிலங்கு அதிகாரிகள், ஊசி மூலம் மயக்க மருந்தைச் செலுத்தி எருமையின் அட்ட காசத்தைத் தடுத்து நிறுத்தினர். சாபா வனவிலங்கு உதவி இயக்குநர் திரு சென். நாதன், "மூன்று ஊசிகளில் மயக்க மருந்து வைத்து மாட்டை நோக்கிச் சுட்டோம்," என்றார். "அந்த விலங்கைப் பின்னர் உரிமையாளரிடம் ஒப்படைத்து விட்டோம்," என்றும் அவர் தெரிவித்தார். நேற்றுக் காலை எருமைக் குர்பான் கொடுக்கப் பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.