சோல்: தென்கொரியாவை திங்கட்கிழமை இரவு இரு நிலநடுக்கங்கள் உலுக்கியதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த நிலநடுக்கத்தில் 14 பேர் காயம் அடைந்ததாகவும் மற்றபடி சேதம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை என்றும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறினார். கியோங்ஜியு நகருக்கு அருகே 5.1 ரிக்டர் மற்றும் 5.8 ரிக்டர் அளவு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாகவும் சோல் நகரிலும் நில அதிர்வை மக்கள் உணர முடிந்ததாகவும் அந்த அதிகாரி கூறினார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்கொரிய அணுமின் நிலையத்தில் உள்ள நான்கு அணு உலைகள் மூடப்பட்டதாகவும் தென்கொரிய அதிகாரிகள் கூறினர்.
தென்கொரியாவை உலுக்கிய இரு நிலநடுக்கங்கள்
1 mins read

