சோல்: வடகொரியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மழையினால் பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கின. வெள்ளம் காரணமாக அந்நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளப்பெருக்கில் இதுவரை 133 பேர் உயிரிழந்ததாக ஐநாவும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கமும் தெரிவித்துள்ளன. இன்னும் 395 பேரைக் காணவில்லை என்றும் ஏராளமான வீடுகளும் பயிர் நிலங்களும் வெள்ளநீரில் சேதம் அடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 1,07,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் மனிதநேய விவகாரங்களுக்கான ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 70 வருடங்களில் இல்லாத பேரழிவை வடகொரியா தற்போது சந்தித்துள்ளது என்றும் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மழை, வெள்ளத்தால் வடகொரிய மக்கள் தவிப்பு
1 mins read
-

