மணிலா: அமெரிக்காவுடன் செய்துகொண்ட பாதுகாப்பு உடன்பாடுகளை பிலிப்பீன்ஸ் மதித்து நடக்கும் என்று பிலிப்பீன்ஸ் வெளியுறவு அமைச்சர் பெர்பெக்டோ யாசே உறுதியளித்துள்ளார். பிலிப்பீன்சின் மின்டானோ பகுதியிலிருந்து அமெரிக்க ராணுவ ஆலோசகர்கள் வெளியேற வேண்டும் என்று பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்ட்டே உத்தரவிட்டது அப்பகுதியில் அமெரிக்க வீரர்கள் இருப்பதால் ஏற்பட்ட அதிருப்தியின் அறிவிப்பு தான் என்றும் அது அதிகாரத்துவ கொள்கை அல்ல என்றும் டுட்டர்ட்டே யின் உதவியாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். எந்த ஒரு நாட்டுடனுமான உடன்பாடுகளை திரு டுட்டர்ட்டே மதிப்பார் என்றும் அமெரிக்காவுடன் 2014ஆம் ஆண்டு செய்துகொண்ட பத்து ஆண்டு கால தற்காப்பு உடன்பாடும் அதில் அடங்கும் என்றும் அமைச்சர் கூறினார். மின்டானோ பகுதியில் 600 அமெரிக்க ஆலோசர்கள் உள்ளனர்.
பிலிப்பீன்ஸ் வெளியுறவு அமைச்சர் பெர்பெக்டோ யாசே. படம்: ராய்ட்டர்ஸ்

