புகைமூட்டத்தால் 100,000 பேர் மரணம்

புகைமூட்டத்தால் 100,000 பேர் மரணம்

1 mins read
0d09f306-582f-4cb5-983b-60eecaba0dc9
-

ஜகார்த்தா: தென்கிழக்கு ஆசியாவில் ஏற்பட்ட புகைமூட்டம் காரணமாக இந்த வட்டாரத்தில் சென்ற ஆண்டு மட்டும் 100,000க் கும் அதிகமானோர் மரணம் அடைந்ததாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. புகைமூட்டப் பாதிப்பால் இந்தோனீசியாவில் 91,000 பேர், மலேசியாவில் 6,500 பேர், சிங்கப்பூரில் 2,200 பேர் மரணம் அடைந்ததாக அமெரிக்க பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். "பல உயிர்களைக் கொல்லும் இந்தப் புகைமூட்டத்தைத்" தடுக்க இந்த வட்டார நாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை ஆய்வு வலியுறுத்துகிறது. அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் மற்றும் கொலம்பிய பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த ஆய்வு பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். இந்தோனீசியாவில் காட்டுத் தீ பற்றி எரியும் இடங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்ட 90,000க்கும் அதிகமானோர் மரணம் அடைந்ததாகவும் அருகில் உள்ள சிங்கப்பூர் மலேசியா ஆகிய நாடுகளிலும் ஆயிரக்கணக் கானோர் மரணம் அடைந்ததாகவும் ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.