வாஷிங்டன்: சிரியாவில் ஐநா வாகனங்கள் தாக்கப்பட்டதற்கு ரஷ்யாவே காரணம் என்று அமெரிக்கா குற்றம் சாட்டி யுள்ளது. உதவிப் பொருட்களை ஏற்றிச்சென்ற அந்த வாகனங்கள் மீது குண்டுகளை வீசித் தாக்கியது ரஷ்யாவின் இரு போர் விமானங்கள்தான் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். இதனை ரஷ்யா மறுத்துள்ளது. அத்தாக்குதலுக்கு கிளர்ச்சித் தரப்பே காரணம் என்று ரஷ்யா கூறியது. திங்கட்கிழமை ஐநா வாகனங்கள் தாக்கப்பட்டதில் உதவிப் பணியாளர்கள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். 2016-09-22 06:00:00 +0800
சிரியாவில் ஐநா வாகனங்கள் மீது தாக்குதல்; ரஷ்யா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு
1 mins read
-

