ஊரடங்கு உத்தரவையும் மீறி சார்லட் நகரில் நீடிக்கும் ஆர்ப்பாட்டம்

ஊரடங்கு உத்தரவையும் மீறி சார்லட் நகரில் நீடிக்கும் ஆர்ப்பாட்டம்

1 mins read
1886ecf6-7456-4890-8bcc-93062b5b8659
-

சார்லட்: வடகரோலினாவில் சார்லட் நகரில் கறுப்பின ஆடவர் ஒருவரை போலிசார் சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து அந் நகரில் கடந்த சில நாட்களாக ஆர்ப்பாட்டங்கள் நடந்து வரும் நிலையில் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அந்த உத்தரவையும் மீறி சார்லட் நகரத் தெருக்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுகூடி போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கூறின.

சார்லட் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை கெய்த் லாமோண்ட் ஸ்காட் என்ற 43 வயது கறுப்பினத்தவரை போலிசார் சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து அங்கு ஆர்ப்பாட்டங் கள் நடந்து வருகின்றன. கூட்டத்தினரைக் கலைக்க போலிசார் வியாழக்கிழமை கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதாகக் கூறப்பட்டது.

போலிசாரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சார்லட் நகரத் தெருக்களில் ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக் காரர்கள். படம்: ராய்ட்டர்ஸ்