நியூயார்க்: சிரியாவிலிருந்து வெளியேறும் அகதிகளில் 3,000 பேருக்கு அடைக்கலம் தர உறுதியளித்துள்ள மலேசியா, தனது உறுதிமொழியை நிறைவேற்ற லெபனானின் உதவியை நாடியுள்ளது. நான்கு மில்லியனுக்கும் கூடுதலான மக்கள்தொகையைக் கொண்டுள்ள லெபனான் சுமார் 1.5 மில்லியன் அகதிகளுக்கு அடைக் கலம் தந்துள்ளது. ஐநா பொதுச்சபையின் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள மலேசிய துணைப் பிரதமர் டாக்டர் அஹ்மட் ஸாஹிட் ஹமிடி, லெபனானிலிருந்து சில அகதிகளை மனிதாபிமான அடிப்படையில் வரவேற்க எண்ணம் கொண்டிருப்பதாக லெபனான் பிரதமர் தம்மம் சாயேப் சலாமுடன் உரையாடிய பிறகு செய்தியாளர்களிடம் கூறினார். மலேசியாவில் ஏற்கெனவே 79 சிரிய அகதிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர். இவ்வாண்டு நிறைவுக்குள் மேலும் 421 பேர் அனுமதிக்கப்படுவர். சிரிய அகதிகள் மலேசியாவுக்குள் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக அவர்களுக்கு பயங்கரவாதத் தொடர்பு இருக்கிறதா என்பது உள்ளிட்ட பல சோதனைகள் நடத்தப்படும் என்றார் டாக்டர் அஹ்மட்.
சிரியாவின் அகதிகளுக்கு அடைக்கலம் தர லெபனானின் உதவியை நாடும் மலேசியா
1 mins read

