கோலாலம்பூர்: கோலாலம்பூர் அடுக்குமாடி வீட்டில் தந்தையும் அவரது இரண்டு குழந்தைகளும் இறந்துகிடந்த சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி யாகியிருக்கின்றன. இறந்த குழந்தைகளில் ஒன்று சில மாதங்களுக்கு முன்பே கொல் லப்பட்டிருக்கலாம் என்று விசார ணையில் தெரிய வந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை அன்று தாமான் ஸ்ரீ சினார் அடுக்கு மாடி குடியிருப்பு வீட்டில் தந்தை இறந்து கிடந்தார்.
அதே வீட்டில் அவரது மூன்று வயது மற்றும் ஏழு மாத குழந் தைகள் இரு பிளாஸ்டிக் பாத்தி ரத்தில் அடைத்து வைக்கப் பட்டிருந்தனர். இந்த நிலையில் இறந்த குழந் தைகளின் இரண்டு மூத்த சகோ தரர்களிடமிருந்து காவல்துறை யினர் சம்பவம் தொடர்பான விவ ரங்களைச் சேகரித்து வரு கின்றனர்.
ஒரு மாதத்துக்கு முன்பே ஒரு குழந்தை இறந்துவிட்டதாகவும் துர்நாற்றத்தை மறைக்க ஊது வத்திகள் ஏற்றி வைக்கப் பட்டதாகவும் ஆறு, எட்டு வயதில் உள்ள சகோதரர்கள் கூறினர். சம்பவம் குறித்துப் பேசிய சென்டுல் காவல் துறை உதவி ஆணையர் ஆர். முனுசாமி, உயிர் பிழைத்த இரு சகோதரர்களின் உடல் நிலை அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருந்தது என்றார்.
"இரண்டு சகோதரர்களைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தேன். உடலில் சிராய்ப்புக் காயங்களும் கீறல்களும் இருந்தன. தலையின் பின்புறம் பெரிய காயம் இருந்தது. விரல் நகங்களின் முனைகள் கருத்திருந்தன. இது, விரல் முறி வினால் ஏற்பட்டிருக்கலாம்," என்று சென்டுல் காவல்துறை தலைமை யகத்தில் செய்தியாளர் களிடம் பேசிய திரு முனுசாமி கூறினார்.
கோலாலம்பூரில் மருத்துவமனை சவக் கிடங்குக்கு வந்த உறவினர்களும் நண்பர்களும். படம்: த ஸ்டார்

