தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

MH17: ஏவுகணை ரஷ்யாவிலிருந்து வந்தது

2 mins read
026924f4-c976-4396-952c-869fa615d371
-

வா‌ஷிங்டன்: உக்ரேனில் நடுவானில் வீழ்த்தப்பட்ட மலேசியா வின் எம்எச்17 விமானம் குறித்து விசாரணை நடத்திய அனைத்துலக விசாரணையாளர்கள், விமானத் தைத் தாக்கிய ஏவுகணை ரஷ்யா வின் ஆதரவு பெற்ற பிரிவினை வாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியிலிருந்து வந்தது என்று தெரிவித்துள்ளனர். ரஷ்யாவிலிருந்து உக்ரேனுக் குக் கொண்டு வரப்பட்ட சாதனம் மூலம் அந்த ஏவுகணைப் பாய்ச்சப் பட்டது என்றும் அவர்கள் கூறினர். கடந்த 2014ஆம் ஆண்டில் உக்ரேன் வான்வெளியில் பறந்து கொண்டிருந்த போயிங் 777 ரக விமானத்தை ஏவுகணைத் தாக்கியதால் பல பாகங்களாகச் சிதறியது.

ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலா லம்பூரை நோக்கிச் சென்ற அந்த விமானத்தில் 298 பேர் பயணம் செய்தனர். இதில் அனைத்துப் பயணிகளும் இறந்தனர். இதன் தொடர்பில் சுமார் நூறு பேரை விசாரிக்கப் போவதாக விசாரணையாளர்கள் தெரிவித்த தாக விபத்தில் இறந்த உறவினர் கள் கூறியிருந்தனர். தொலைபேசி உரையாடல், வீடி யோ பதிவு உள்ளிட்ட பலவற்றை ஆராயப்படும் என்றும் விசாரணையாளர்கள் முன்னதாகத் தெரிவித் தனர். ஆனால் கிழக்கு உக்ரேனில் இருந்த பிரிவினைவாதிகள்தான் ஏவுகணையை பாய்ச்சியதாகக் கூறப்பட்டதை ரஷ்யா மறுத்தது.

நெதர்லாந்து தலைமையிலான கூட்டு விசாரணைக் குழுவில் நெதர்லாந்து, ஆஸ்திரியா, பெல் ஜியம், மலேசியா, உக்ரேன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த விசாரணை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். "ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியிலிருந்து வந்த ஏவு கணையே விமானத்தைத் தாக்கி வீழ்த்தியது என்ற முடிவுக்கு வந்துள்ளோம்," என்று விசாரணைக் குழுவின் தலைவரான நெதர்லாந்து காவல்துறை விசார ணையாளர் வில்பெர்ட் பாலிசென் குறிப்பிட்டார்.

செய்தியாளர்களிடம் பேசிய கூட்டு விசாரணைக் குழுவின் உறுப்பினர்கள். படம்: ஏஎஃப்பி