நாடு முழுவதும் பிரசாரத்தை தொடங்கியது பெர்சே

நாடு முழுவதும் பிரசாரத்தை தொடங்கியது பெர்சே

1 mins read
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வரும் நவம்பர் 19ஆம் தேதி கோலாலம்பூரில் மாபெரும் பேரணி நடத்தப் போவதாக அறிவித்துள்ள பெர்சே அமைப்பு அதற்கான பிரசாரத்தை நேற்று தொடங்கியது. இந்தப் பிரசாரம் அடுத்த 7 வாரங்களுக்கு நீடிக்கும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 246 இடங்களில் பிரசார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் சாரா அமைப்புகளுடன் சேர்ந்து பெர்சே இந்த பிரசாரத்தை செய்யவுள்ளது. நேற்று கோலாலம்பூரில் ஆறு இடங்களில் பெர்சே ஆதரவாளர்கள் ஒன்றுகூடினர். நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பேரணியில் மலேசியர்கள் பலர் கலந்துகொள்ள வேண்டும் என்று பெர்சே அழைப்பு விடுத்துள்ளது. பெர்சே அமைப்பு 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்திய இதுபோன்ற பேரணியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.