ஹாங்காங்: ஆடவர் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டதைத் தடுக்கும் நோக்கில் ஹாங்காங் போலிசார் சுட்டதில் மூவர் காயமுற்றனர். தாக்குதலில் ஈடுபட்ட இருவரும் கத்தியால் தாக்குண்ட ஒருவரும் காயமுற்ற அம்மூவர் என போலிசார் தெரிவித்தனர். கத்திகளைக் கொண்டிருந்த சுமார் ஆறு பேர் ஆடவர் ஒருவரைத் தாக்க முற்பட்டதாக போலிஸ் அதிகாரி மா வாய் ஹிங் கூறினார். யாவ் மா டெய் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நகரின் மையத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. பொதுவாகப் பாதுகாப்பானதாகக் கருதப்படும் ஹாங்காங்கில் இத்தகைய வன்முறையுடன் கூடிய தெருச்சண்டை நடைபெற்றுள்ளது. சண்டையை நிறுத்துமாறு போலிசார் எச்சரித்ததை அவர்கள் நிராகரித்ததை அடுத்து நான்கு முறை சுட்டதாக போலிசார் கூறினர். காயமுற்ற மூவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
ஹாங்காங்கில் கத்திக்குத்தை நிறுத்த போலிஸ் துப்பாக்கிச்சூடு, மூவர் காயம்
1 mins read

