எஃப்1ல் ஆடை களைந்தோர் மீது நடவடிக்கை

எஃப்1ல் ஆடை களைந்தோர் மீது நடவடிக்கை

1 mins read
18c0bcdb-cb6d-44fe-a817-048686bca9fe
-

கோலாலம்பூர்: மலேசியாவில் அண்மையில் நடைபெற்ற எஃப்1 கார் பந்தயத்தின்போது தங்கள் ஆடைகளைக் கழற்றி உள்ளா டைகளுடன் நின்று கொண் டிருந்த ஒன்பது ஆஸ்திரேலி யர்கள் அநாகரிகக் குற்றச் சாட்டை எதிர்நோக்கக்கூடும். அல்லது அவர்கள் அனைவரும் மலேசியாவிலிருந்து வெளி யேற்றப்படலாம் என்று மலேசிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த ஒன்பது பேரும் மலேசியக் கொடியின் வடி வமைப்பிலான உள்ளாடை களை அணிந்துகொண்டு தங்கள் காலணிகளில் பீர் ஊற்றிக் குடிப்பதைக் காட்டும் புகைப்படங்களும் காணொளி களும் வலம் வந்ததை அடுத்து அவர்களுக்கு எதிராகக் கடு மையான எதிர்ப்பு கிளம்பியது. மலேசியாவை அவர்கள் அவமதித் துவிட்டதாக அந்நாட்டு மக்கள் சினங்கொண்டனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேனியல் ரிக்கார்டோ அந்தப் பந்தயத்தில் வென்றதை அடுத்து இந்த ஒன்பது பேரும் இவ்வாறு கொண்டாட்டத்தில் இறங்கினர். மலேசிய அதிகாரிகள் இந்த ஒன்பது ஆடவர்களிடம் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

மலேசியக் கொடி வடிவமைப்பிலான உள்ளாடைகளுடன் வலம் வந்த ஆஸ்திரேலிய ஆடவர்களுக்கு எதிராக அநாகரிகக் குற்றச்சாட்டு பதிவாகலாம். அல்லது மலேசியாவைவிட்டு வெளியேற்றப் படலாம். படம்: தி ஸ்டார்