ஒரே நாளில் 6,055 பேர் கடலில் மீட்பு

ஒரே நாளில் 6,055 பேர் கடலில் மீட்பு

1 mins read
fad1ad21-e0f2-4a6e-a5f2-4f3dee00ba50
-

ரோம்: லிபியாவிலிருந்து ஐரோப்பா வுக்குக் கடல் வழியாகத் தப்பிக்க முயன்ற ஆயிரக்கணக்கான குடி யேறிகள் காப்பாற்றப்பட்டுள்ள தாக இத்தாலி, லிபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் அந்த அபாயகரமான கடல் வழிப் பயணத்தை மேற்கொண்ட ஏறத் தாழ 6,055 குடியேறிகள் காப்பற்றப் பட்டனர். 22 பேர் கடலில் மாண்டு கிடக்கக் காணப்பட்டனர்.

லிபியாவின் கடற்கரைக்கும் இத்தாலியின் சிசிலித் தீவுக்கும் இடையில் உள்ள லாம்பெடுசா தீவில் இருக்கும் மருத்துவ மனைக்குக் கடலைக் கடக்க முயன்ற ஒரு கர்ப்பிணிப் பெண் ணும் ஒரு குழந்தையும் ஹெலி காப்டரில் கொண்டு செல்லப் பட்டதாக இத்தாலிய அதிகாரிகள் கூறினர். குறைந்தது ஒன்பது குடியேறி கள் மரணம் அடைந்ததாக அவர் கள் தெரிவித்தனர். கடலில் மூழ்கி மரணமடைந்த 11 குடியேறிகளின் உடல்கள் லிபியக் கடற்கரையில் ஒதுங்கி இருந்ததாக அந்நாட்டு அதிகாரி கள் தெரிவித்தனர். மேலும் இரண்டு குடியேறிகள் அவர்கள் பயணம் செய்துகொண் டிருந்த படகு கடலில் மூழ்கியதை அடுத்து மரணமடைந்தனர்.

கடலில் தத்தளிக்கும் குடியேறியை மீட்கும் அதிகாரி. படம்: ஏஎஃப்பி