மத்திய தரைக்கடல் பகுதியில் லிபியாவுக்கு அருகே கடலில் தத்தளிக்கும் குடியேறிகள் பலரை மீட்புக் குழுவினர் காப்பாற்றி வருகின்றனர். கடல் நீரில் மூழ்கும் ஆபத்தில் இருக்கும் ஒருவருக்கு உதவிக் கரம் நீட்டுகிறார் மீட்புக் குழுவைச் சேர்ந்த ஒருவர். இன்னும் பலர் மீட்புக் குழுவினரின் வருகையை எதிர்பார்த்து மூழ்கும் நிலையில் உள்ள படகில் காத்திருக்கின்றனர். ஐரோப்பிய நாடுகளைச் சென்றடையும் நோக்கத்தில் குடியேறிகள் ஆபத்தான படகுப் பயணத்தை மேற்கொள்கின்றனர். அந்தப் படகுகளில் பல கடலில் மூழ்குவதால் அப்படகுகளில் செல்வோர் கடலில் தத்தளிக்க நேரிடுகிறது. பலரை இத்தாலிய மற்றும் லிபிய கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். படம்: ஏஎஃப்பி
கடலில் தத்தளித்த குடியேறிகளுக்கு உதவிக்கரம்
1 mins read
-

