நியூயார்க்: அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கும் வேளையில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்ப் மீது பல பெண்கள் குற்றச்சாட்டு களைக் கூறியுள்ளனர். டிரம்ப் தங்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக வும் தங்கள் சம்மதம் இல்லாமல் முத்தமிட்டதாகவும் நான்கு பெண் கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஞாயிறன்று ஒரு தொலைக்காட்சி விவாதத்தில், டிரம்ப் தான் எந்தப் பெண்ணையும் அவர்களின் விருப்பத்துக்கு மாறாகத் தொட்ட தில்லை என்று கூறிய சில நாட்களில் அவர் மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் கூறப் பட்டுள்ளன. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையிடம் பேட்டியளித்த ஒரு பெண், 30 ஆண்டுகளுக்கு முன்பு விமானத்தில் சென்றபோது டிரம்ப் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றார் என்று கூறினார்.
ஜெசிக்கா லீட்ஸ், ரசெல் குரூக்ஸ் ஆகிய இரு பெண்களும் தங்கள் சம்மதம் இல்லாமல் டிரம்ப் தங்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக புகார் கூறியுள்ளனர். இவ்விரு பெண்களும் அளித்த பேட்டி நியூயார்க் டைம்ஸ் நாளேட்டில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெசிக்கா லீட்சுக்கு தற்போது 74 வயதாகிறது. இவர் 30 ஆண்டுகளுக்கு முன்பு விமானத் தில் நியூயார்க் சென்றபோது டிரம்ப் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றதாகக் கூறினார். டிரம்பை அதன் பின்பு தான் சந்திக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார் மற்றொரு பெண்ணான ரசெல் குரூக்ஸ் " 2005ஆம் ஆண்டு மேன்ஹாட்டனில் உள்ள டிரம்புக் குச் சொந்தமான கட்டுமான நிறு வனத்தில் தான் வரவேற்பாளராக பணியாற்றியபோது ஒரு நாள் அவர் என்னை கட்டிப்பிடித்து முத்தமிட்டார். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன்.
என்னால் எதுவும் செய்ய முடியவில்லை," என்று அவர் கூறினார். இப்போது தனக்கு 32 வயதாகிறது என்றும் 10 ஆண்டுகளுக்கு முன்பு இது நடந்தது என்றும் அவர் கூறியுள் ளார். அவ்விரு பெண்களும் ஹில்லரி அதிபராக வருவதை ஆதரிப்பதாகக் கூறியுள்ளனர். டிரம்ப் மீது மேலும் இரு பெண்கள் இத்தகைய குற்றச் சாட்டுகளைக் கூறியுள்ளதாக பத்திரிகை தகவல்கள் கூறின. இந்நிலையில், டிரம்ப் மீது கூறப்படும் இத்தகைய குற்றச் சாட்டுகளை அவரது பிரசாரக் குழு மறுத்துள்ளது. இவை அனைத்தும் அரசியல் நோக்கம் கொண்டவை என்று அக்குழு அறிவித்துள்ளது.

