ஈராக்கில் ஆளில்லா விமானம் மூலம் ஐஎஸ் தாக்குதல்

ஈராக்கில் ஆளில்லா விமானம் மூலம் ஐஎஸ் தாக்குதல்

1 mins read

பாக்தாத்: ஈராக்கின் வடக்குப் பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் ஐஎஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இருவர் பலியானதாக குர்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெடிக் கும் சாதனத்தைக் கொண்ட ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தி போராளிகள் தாக்குதலை நடத்தியதாகத் தெரிகிறது. இந்தத் தாக்குதலில், தங்களது படையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டதாக குர்திய அதிகாரிகள் கூறினர். பிரெஞ்சு படையைச் சேர்ந்த இரு வீரர்கள் அத்தாக்குதலில் காயம் அடைந்தனர். சிறிய விமானங்களை ஐஎஸ் போராளிகள் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால் அவர்கள் இந்த வகையான விமானத்தைப் பயன்படுத்தி கடும் தாக்குதலை நடத்தியது இது தான் முதல் முறை என செய்தியாளர்கள் கூறுகின்றனர்.