மறைந்த மன்னருக்கு தாய்லாந்து மக்கள் அஞ்சலி

மறைந்த மன்னருக்கு தாய்லாந்து மக்கள் அஞ்சலி

2 mins read
ec19c58a-36d1-4542-a52e-b0fa5d88d48a
-

பேங்காக்: தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ் மறைவு அந்நாட்டு மக்களை மீளாத் துயரத்தில் ஆழ்த்தி உள்ள நிலை யில் அவருக்கு இறுதி மரியாதை செலுத்த நேற்று ஏராளமான மக்கள் அரண்மனைக்கு முன்பு காத்திருந்தனர். அவர்கள் கறுப்பு நிற உடை அணிந்து அரண்மனைக்கு முன்பு வரிசையில் நின்றனர். முன்னதாக மன்னரின் உடல் மருத்துவ மனையிலிருந்து அரண்மனைக்கு கொண்டுவரப்பட்டபோது அவரது இறுதி ஊர்வலத்தைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் பேங்காக் தெருக்களில் திரண் டிருந்தனர்.

நேற்று பிற்பகல் மன்னரின் நல்லுடல் அரண்மனை மைதானத் தில் உள்ள ஒரு கோவிலில் வைக்கப்பட்டது. அரச முறையில் இறுதிச் சடங்கு நடக்கும் வரை பல மாதங்களுக்கு அவரது நல்லுடல் அங்கு வைக்கப் பட்டிருக்கும் என்று அரண்மனைத் தகவல் தெரிவித்தது. உலகிலேயே ஆக நீண்ட காலம் மன்னராக இருந்தவர் என்ற பெருமையைப் பெற்ற பூமிபோல் அதுல்யதேஜ் அவரது 88 வது வயதில் வியாழக்கிழமை மரணம் அடைந்தார். பல ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த மன்னரின் உடல்நிலை சென்ற வாரம் மோசம் அடைந்ததைத் தொடர்ந்து அவர் வியாழக்கிழமை காலமானார்.

அவர் மரணம் அடைந்த செய்தி கேட்டு, அவர் அனுமதிக் கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு வெளியே கூடியிருந்த மக்கள் கதறி அழுதனர். 70 ஆண்டுகள் மன்னராக இருந்த பூமிபோல் மக்கள் விரும்பும் மன்னராக விளங்கினார். நாட்டை ஒன்றுபடுத்தும் சக்தி யாக அவர் விளங்கினார். அவர் இல்லாமல் நாடு எப்படி இருக்குமோ என்ற கவலை பலருக்கு. மன்னரின் மறைவை முன்னிட்டு நாடு முழுவதும் ஓராண்டு காலம் வரை துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ-சா அறிவித்தார்.

மறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யதேஜுக்கு அஞ்சலி செலுத்த அரண்மனை முன்பு காத்திருக்கும் மக்கள். அவர்கள் அனைவரும் கறுப்பு உடை அணிந்துள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ்