சிகாகோ: சோமாலியாவைச் சேர்ந்த குடியேறிகள் தங்கியிருந்த அடுக்குமாடி கட்டடத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கத் திட்டமிட்டிருந்ததாக கேன்சஸில் மூவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்த அவர்கள் சதித் திட்டம் தீட்டியது தொடர்பில் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் கூறினார். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்த மூவரும் கேன்சஸ் குடியிருப்பாளர்கள் ஆவர்.
தாக்குதல் நடத்த சதித் திட்டம்; கேன்சஸில் மூவர் மீது குற்றச்சாட்டு
1 mins read

