மணிலா: பிலிப்பீன்சின் லூஸே„ன் தீவை நேற்று சரிகா புயல் புரட்டிப் போட்டது. பல கூரைகளைப் பிய்த்து எரிந்த சூறாவளிக்காற்று மின்சார கோபுரங்களையும் சாய்த்தது. 12,000க்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். சிறிய அளவில் நிலச்சரிவும் வெள்ளமும் ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவர் மாண்டுபோனதாகவும் மூவர் காணாமல் போயிருப்பதாகவும் கூறப்பட்டது. சூறாவளியால் ஏற்பட்ட சேதத்தை உள்ளூர் அதிகாரிகள் கணக்கிட்டு வருகின் றனர். புதையுண்ட சாலைகளை மீட்பது, மின்கம்பங்களைச் சீரமைப்பது சேதங்களை அப்புறப்படுத்து வது ஆகிய பணிகளில் ஊழியர்கள் துரிதகதியில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கனத்த மழைப்பொழிவை அந்த வட்டாரத்தில் ஏற்படுத்திய சரிகா சூறாவளி, நேற்று பிற்பகல் தென் சீனக் கடல் பகுதிக்கு நகர்ந்ததாக வானிலை ஆய்வக அதிகாரி கள் தெரிவித்தனர். வரும் வியாழக்கிழமை 'ஹைமா' எனும் மற்றொரு புயல் அதே பகுதியைத் தாக்கும் அபாயம் இருப்பதாகவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சரிகா சூறாவளியால் பலர் வீடுகளிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். சிற்றோடை ஒன்றின் மீதிருக்கும் பாலத்தின் அடியில் தஞ்சம் புகுந்திருக்கும் இந்தக் குடும்பத்தைப் போன்று பலரது இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. படம்: ஏஎஃப்பி

