பெய்ஜிங்: சீனா, இரண்டு விண்வெளி வீரர்களுடன் 'ஷெங்ஸே„வ் 11' என்ற விண்கலத்தை நேற்று காலை விண்ணில் செலுத்தியது. சீனாவின் விண்வெளி வீரர்களான 49 வயது ஜிங் ஹாய்பிங் மற்றும் 37 வயது சென் டாங் ஆகியோர் இந்த விண்கலத்தில் சென்றுள்ளனர். 'ஷெங்ஸே„வ் 11' விண்கலத்தில் விண்வெளிக்குச் செல்லும் இரண்டு விஞ்ஞானிகளும் சுமார் ஒருமாத காலம் விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
இந்த ஆய்வுகளை அடுத்து வரும் 2022-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் நிரந்தரமான ஆய்வு நிலையத்தை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. சீனா கடந்த 2013-ம் ஆண்டு 'டியங்காங் 1' என்ற ஆய்வு விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலத்தில் சென்ற மூன்று சீன விஞ்ஞானிகள் 15 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளை நடத்தி முடித்து, வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினர்.
சீன விண்வெளி வீரர்கள் 49 வயது ஜிங் ஹாய்பிங் மற்றும் 37 வயது சென் டாங். படம்: சின்ஹுவா

